நாம் வாழும் இந்த இயந்திரமயமான இருபத்து ஓராம் நூற்றாண்டில் திரும்பும் திசைகள் எல்லாம் விஞ்ஞான தொழிநுட்பக் கண்டுபிடிப்புக்கள் ஆட்சிசெய்துகொண்டிருக்கின்றன. தொழிநுட்ப வளர்ச்சியின் நோக்கங்களில் உலகை அமைதிப்படுத்துவதும் ஒன்று தான். அந்த நோக்கம் இன்றுவரை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கான காரணம் யாதெனில் தொழிநுட்ப முயற்சி மட்டுமல்லாது வாசிப்பு முயற்சியும் இணைக்கப்படாமை ஆகும். கண்களை திறந்து கொண்டு காணும் கனவே வாசிப்பு எனலாம். தற்காலத்தில் வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்று கூறினாலும் நமது ஆசிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து வருகிறது. நவீன யுகத்தில் இன்னும் மூன்றாம் உலக யுத்தம் எழாமல் அடக்கி வைத்திருப்பது வாசிப்பு ஆகும். 'வாசிப்பதன் மூலம் மனிதன் பூரணமடைகின்றான்" என்பது நமது முன்னோர் வாக்கு. ஒருவர் வாசிப்பதன் மூலம் பல விடயங்களை அறிந்துகொள்வார்.
அதிபர்
சிவானந்தா தமிழ் வித்தியாலயம்