PRINCIPAL : (+94) 774058929
email : [email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Shivanantha Tamil Vidyalaya

சிவானந்தா தமிழ் வித்தியாலயம்

பதுளை வலயம்

  • Register
  • Login
Shivanantha Tamil Vidyalaya

சிவானந்தா தமிழ் வித்தியாலயம்

பதுளை வலயம்

  • முகப்பு பக்கம்
  • எம் பாடசாலையைப் பற்றி
    • பாடசாலை வரலாறு
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பாடசாலை கீதம்
      • நோக்கம் மற்றும் குறிக்கோள்
      • பாடசாலை கொடி
      • பாடசாலை வண்ணங்கள்
      • சீருடை
      • பாடசாலை இல்லங்கள்
    • மாணவர்களுக்கான விதிகள்
    • பாடசாலை வரைபடம்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • ஆரம்பப்பிரிவு
      • இடைநிலைப்பிரிவு
      • உயர்தரம்
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • அதிபர்
      • உப அதிபர்
      • பகுதித் தலைவர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • பாடசாலைக் குழுக்கள்
  • புகைப்படங்கள்
  • தொடர்புக் கொள்ள
  • பதிவிறக்கங்கள்

பள்ளி பற்றி

Toggle navigation

வரலாறு

  • வரலாறு
  • நிறுவனர்கள்
  • கடந்த அதிபர்கள்
  1. Home
  2. எம் பாடசாலையைப் பற்றி
  3. பாடசாலை வரலாறு
  4. வரலாறு

வரலாறு

பாடசாலை வரலாறு


எமது பாடசாலையான சிவானந்தா தமிழ் வித்தியாலயம் 1922 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதன் முதலாக பலகல்ல தமிழ் வித்தியாலயம் என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. தோட்டத் தொழிற்சாலை அருகாமையில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்றிலையே பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருந்து. தோட்ட முகாமையாளரின் கண்காணிப்பிலேயே இப்பாடசாலை இயங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இக்காலப்பகுதியில் பாடசாலைக்கு வரும் ஒரு பிள்ளைக்கு (ஒரு கொத்து) என்ற அடிப்படையில் அரிசி வழங்கபட்டதோடு பால் இ என்ற பெயரால் அடைக்கப்படும் பிஸ்கட் வகையும் வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறாக வழங்கப்படும் உணவானது வராத மாணவர்களின் தரவு சேகரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


1922 தொடக்கம் 46 வருட தகவல் கிடைக்கப்பெறவில்லை


1968 - 1971 காலப்பகுதியில் எமது பாடசாலைக்கு அதிபராக திரு.மு.சிவஞானம் என்பவர் கடமையாற்றி இருந்துள்ளார்.1985 காலப்பகுதியில் பாடசாலைக்கு அதிபராக திரு. தெபோரா ஜேக்கப் என்பவர் கடமையாற்றி இருந்துள்ளார். இந்த பாடசாலையானது 1978 காலப்பகுதியிலேயே அரசு கையேற்றுள்ளது. தொடர்ந்து அதிபராக திரு.க.சுந்தர்ராஜ் கடமையாற்றி இருந்துள்ளார். ( 28.02.1990 )

01.09.1990 காலப்பகுதியில் புதிய கட்டிடம் ஒன்றினை நிருவுவதற்கான ஆலோசனை முன் வைக்கப்பட்டு திட்டமிடப்பட்டது.அந்த வகையில் 1990ம் ஆண்டு 10ஃ31ம் திகதி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.1991.09.24ம் நாளன்று திரு.சண்முகராஜ் அவர்கள் பாடசாலையை பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கட்டிட வேலைப்பாடுகள் நிறைவடைந்து 1991.02.13 திகதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

 


இக்காலப்பகுதியில் கடமையாற்றிய திரு.சண்முகராஜ் அதிபர் அவர்களால் பாடசாலை கீதம் எழுதப்பட்டது.அத்தோடு பலகல தமிழ் வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வந்த பாடசாலை பதுஃ சிவானந்தா த.வி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


தொடர்ந்து தரம்; 01 – 05 வரை நடாத்தப்பட்டு வந்த பாடசாலையில் தரம் 06 இனையும் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை அக்காலப்பகுதியில் கல்வி அதிகாரியாக இருந்த திரு.று.ஆ.ஏ. வணசிங்கவிடம் 1991.12.10 முன் வைக்கப்பட்டது.இதன் பயனாக 1992.01.02 அன்றைய தினம் தரம் 6 ஆரம்பிக்கப்பட்டது.


இவ்வாறாக தொடர்ந்து கல்வி செயற்பாடுகளில் முன்னேறி வந்த பாடசாலையில் 1992.11.19 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் முறையாக லிங்கேஸ்வரன் என்ற மாணவன் சித்தி அடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்தார.; 1993 காலப்பகுதியில் இப்பாடசாலையில் 07 ஆசியர்களே கடமையாற்றி வந்தனர்.


1994.04.27 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்னும் ஒரு கட்டிடம் கட்டுவதற்கான தளம் வெட்டப்பட்டது பின்பு 1994.06.10 அடிக்கல் நாட்டப்பட்டது.தொடர்ச்சியாக 24.01.1995 ஆம் ஆண்டு தரம் 9 ற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது 24.01.1995 ஆம் ஆண்டு 80 x 20 கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இக்கால பகுதியிலேயே தரம் ஒன்பதாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கால பகுதியில் 10 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றினார்கள்.


அடுத்து 1996 கால பகுதியில் தரம் 10 ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஏந்து பாடசாலையாக காணப்படுவதால் தியனகலஇ கிளன் அல்பின்இ செல்வகந்த போன்ற பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வருகை தந்தனர.; 11.11.1995 மூன்றாவது கட்டிடத்தை அமைப்பதற்கான நில அளவை இடம் பெற்றது. 1996 கால பகுதியில் 11 ஆசிரியர்களும் இ 1997 காலப்பகுதியில் 12 ஆசிரியர்களும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

1997.12.09 ஆம் நாள் அன்று திரு எஸ்.ரவிக்குமார் அவர்கள் உப அதிபராக கடமை ஏற்றார.; 1998.03.06 முதல் ஆண்டு என்று அழைக்கப்பட்ட முறை மாற்றப்பட்டு தரம் என்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 11.02.2000 ஆண்டு தரம் ஒன்றிற்கான கட்டிடம் நிர்வகிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.1998 காலப்பகுதிகளில் பாடசாலைக்கான விளையாட்டு மைதானம் வெட்டப்பட்டது. இதற்காக 50,000 ரூபாய் நிதி உதவி திரு.வேலாயுதம் ஐயா அவர்கள் வழங்கி இருந்தார்.


இவ்வாறான இயங்கி வந்த எம்முடைய பாடசாலையில் கற்றல் நடவடிக்கை இணை பாடவிதான செயல்பாடுகளிலும் மிகுந்த வளர்ச்சியினை அடைந்து வந்தமைக்கான சான்றுகள் இங்கு குறிப்பிடப்படுகின்றது. நாடகம் வில்லுப்பாட்டுஇவிளையாட்டு எழுத்தாக்க போட்டிகள் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெறச் செய்தமை பெருமை அந்த காலகட்டத்தில் இருந்தவர்களை சாரும். குறிப்பிட்டுக் கூற போனால் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி தினத்திற்கு நாடக குழுவினை திரு.அழகுராஜா அனுப்பி வைத்தார். கட்டுரை போட்டிக்கு செல்வி.ந.உமாகாந்தலா என்பவரும்இ செல்வி.நா.சித்ராதேவி என்பவரை உயரம் பாய்தல் போட்டிக்கு திரு.நற்குணராஜ் அவர்களும் திரு செந்தில்குமார் அவர்களும் தயார் படுத்தி அகில இலங்கையில் பங்குப்பற்றச் செய்தனர். இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளுக்கு மாணவர்களுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தி செய்த பெருமை பாடசாலை சாரும். 2003.11.06 அர்த்த நாதம் நூல் வெளியீடு இடம் பெற்றது.


இது ஐந்தாவது இதழாக காணப்பட்டது. இவ்வாறாக வெற்றிப் பாதையில் கடந்து வந்த இந்த பாடசாலை ஏந்து பாடசாலை என்பதன் காரணமாக கிரஹாம்ஸ்லேன்ட் தியனகல பாடசாலைகளில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு செயலமர்வுகளை இலவசமாக நடத்துவதிலும் பின் நிற்கவில்லை பல வெற்றிகளை பற்றி வந்த இந்த பாடசாலை ஆரம்ப நிலைக்கும் இன்னும் பல முயற்சிகளை கண்டுள்ளது. இந்த பாடசாலை மண்டபங்கள் சமூக நலன் சார்ந்த கட்டிடங்கள் கருத்தரங்குகள் என்பன நடத்துவதற்கு வழங்கி சமூக நலனையும் பேணி வருகின்றது குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது அத்தோடு மாணவர்களின் பற்சுகாதாரம் தடுப்பூசிகள் தொடர்பான கவனம் என்பன


முழுமையாக பேணப்பட்டு வருகின்றது. 2014.05.29 திரு.எஸ் சுந்தர்ராஜ் 2015.02.09 திரு.ம.நாகராஜா 2017.02.16 திரு.ளு.ஜெயச்சந்திரன் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


மேலும் இந்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மேற்படிப்பு தொடர்பாக இங்கு கடமையாற்றி அனைத்து அதிபர்களும் உதவி புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் சிறப்பு களப்பயணங்கள் அழைத்து செய்வதிலும் இந்த பாடசாலை பின்னிக்கவில்லை மேலும் விஷிட்ட தருவோ நிகழ்ச்சி திட்டம் மூலமும் மாணவர்களின் கல்வி நிலை மேம்படுத்தப்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


அர்த்தநாதம் என்ற நூல் 05 இதழ்களை குறிப்பிட்ட சில வருட கால இடைவெளியின் பின்னர் சிவந்தன் என்று ஒரு இதழ் 2019 வெளியிடப்பட்டது 2020 தொடக்கம் 2021 கால பகுதியில் அதிகரித்து வந்த கொரோனா நோய் தாக்கத்தின் போதும் இப்பாடசாலை அதிக கவனம் செலுத்தி வந்தது. எல்லா விதத்திலும் முன்னேறி வந்துள்ள இந்த பாடசாலையை எமது திரு.சு.நவீனராஜா அதிபர் மென்மேலும்; பாடசாலை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்கின்றார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .

Shivanantha Tamil Vidyalaya

சிவானந்தா தமிழ் வித்தியாலயம்

பதுளை வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • குழுக்களும்,மன்றங்களும்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Ballagalla Division , Glen Alpin , Badulla .

: (+94)766707067

: [email protected]

Supported By

© 2026 Shivanantha Tamil Vidyalaya. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk